கல்முனை கல்வி வலய பாடசாலைகளிலுள்ள சுற்றாடல் முன்னோடி கழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி பதக்கத்திற்காக பூர்த்தி செய்யவேண்டிய சுற்றாடல் ஆராய்ச்சிகள், தலைப்புக்கள், அதற்கான ஆரம்ப வரைபுகள், முறைமையியல், பரிசோதனைகள், முடிவுகள், தரப் பகுப்பாய்வு, சுற்றாடல் ஆராய்ச்சி அறிக்கைகளை அறிக்கையிடும் முறைமைகள் பற்றி விரிவுரைகளும், கலந்துரையாடலும் இடம்பெற்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பேராசிரியர் கலாநிதி ஏ.எம். றஸ்மி (புள்ளிவிபரவியல், கணித விஞ்ஞான பிரிவு), ஏ.எம். றியாஸ் அகமட் (சிரேஸ்ட விரிவுரையாளர், தலைவர், உயிரியல் விஞ்ஞான பிரிவு) ஆகியோரால் விரிவுரைகளும், கலந்துரையாடல்களும் நிகழ்த்தப்பட்டன.
தேசிய சுற்றாடல் அதிகார சபையின் நிகழ்ச்சித் திட்டத்திற்கான சுற்றாடல் அதிகாரி திருமதி பீ. செவ்வேள்குமரனின் ஒழுங்குபடுத்தலில், கல்முனை கல்வி வலய பணிப்பாளர், நிகழ்ச்சி திட்டத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் வழிகாட்டலில், நிகழ்ச்சித் திட்டத்திற்கு பொறுப்பான ஆசிரிய ஆலோசகர் றாசிக் ஆதம்பாவா ஒருங்கிணைப்பில் ஐம்பதிற்கு மேற்பட்ட மாணவர்களும், பொறுப்பான பாடசாலை ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment