வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தை மலை முருகன் ஆலய வருடாந்த ஆடி வேல் விழா உற்சவம் இன்று 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
திருவிழா ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் சிறப்பாக நடைபெறவுள்ளது.
ஆடிவேல் விழா உற்சவம் தொடர்ந்து 13 நாட்கள் இடம்பெற்று ஆகஸ்ட் 02ஆம் தேதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவடையை இருப்பதாக ஆலய பரிபாலன சபை வண்ணக்கர் டி.எம்.சுதுநிலமே திசாநாயக்க தெரிவித்தார்.
வழக்கம்போல அன்னதானம் மற்றும் பஸ் போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இம்முறை கதிர்காமம் உற்சவம் முன்கூட்டியே நிறைவடைந்திருப்பதால் உகந்தமலை முருகன் ஆலய ஆடிவேல்விழா மிகவும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments :
Post a Comment