கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பிரதேச கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் கலை நிகழ்வுகளை
ஆற்றுகை செய்து வருகிறது.
இந்நிகழ்வின் தொடராக இன்று பிரதேச கலாசார பேரவை கலாசார அதிகார சபை மற்றும் கலாசார மத்திய நிலையம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் கலைமுற்றம் நிகழ்வு இடம்பெற்றது.
இன்றைய நிகழ்வு பிரதேச செயலகம் முன்றலில் மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் ஸாஹிர் மௌலானா வித்தியாலய மாணவர்களின் வில்லுப்பாட்டு, அப்துல் காதர் வித்தியாலய மாணவர்களின் கசீதா, கலாச்சார மத்தியநிலைய மாணவர்களது கோலாட்டம் தமிழ்ச்சாரல் கலை மன்றத்தின் நாட்டார் பாடல் மற்றும் ஹனிமூன் கலை மன்றத்தின் நாடகம் ஆகியன ஆற்றுகை செய்யப்பட்டன.
இந்நிகழ்வுக்கு பிரதேச செயலாளர் நிஹாறா மெளஜுத் தலைமை தாங்கியதுடன் நிருவாக உத்தியோகத்தர் ஜாஹிதா ஜலால்தீன் கலந்து சிறப்பித்தார். கலாசார உத்தியோகத்தர்களான எம் எச் எம் நியாஸ் எம் சீ எம் றிஸ்வான் கலாச்சார மேம்பாட்டு உத்தியோகத்தர் எம் எம் மஹ்பூல் ஆகியோர் இந்நிகழ்வை நெறிப்படுத்தினர்.
0 comments :
Post a Comment