பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவிகள் உதைபந்தாட்ட அணி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் பிரகாசிப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை)
களுவாஞ்சிகுடியின் 17 வயதிற்குட்பட்ட மகளிர் உதைபந்தாட்ட அணியினர்
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்டனர்.

வேல்முருகன் வினியோக நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உதைபந்தாட்ட துறையில் பெண்களை வலுப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியொன்றினை ஒழுங்கு செய்திருந்தனர்.

இச்சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 18 முன்னணி பாடசாலைகள் கலந்து கொண்டிருந்த போதிலும் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலம் ( தேசிய பாடசாலை) களுவாஞ்சிக்குடி மாணவிகள் தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



 

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :