பாகிஸ்தான்'பிரதமர் ஷெஹ்பாஸ் இலங்கை ஜனாதிபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாடினார்
பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை திங்கட்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இரு நாடுகளினதும் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.
இதன்போது, சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) நாட்டின் ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு ஆதரவளித்த இலங்கை ஜனாதிபதிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
பிராந்திய அமைதி மற்றும் அபிவிருத்தியை மேம்படுத்துவதில் இலங்கையின் பங்களிப்புக்கு மதிப்பளிப்பதாகவும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மிக விரைவில் வெளிவரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர்கள் மட்ட உடன்படிக்கையை எட்டியதற்காக பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார்.
பாகிஸ்தானின் கடினமான பொருளாதார சூழ்நிலையில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் முயற்சிகளை இலங்கை ஜனாதிபதி பாராட்டினார்.
0 comments :
Post a Comment