அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலக நிர்வாகத்துக்கு உட்பட்ட கல்முனைக் குடி 14ம் கிராம சேவகர் பிரிவில் அமையப் பெற்றுள்ள மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) அதே கிராம சேவகர் (14) பிரிவில் இயங்கி வருகின்ற கிராமிய அபிவிருத்தி சங்கத்தினால் (RDS) கல்லூரியில் கணினி வேலைகள், ஆவண கோப்பு தயாரிப்பு, நிர்வாக அலுவலக பணிகள் மற்றும் கணினி ஆய்வு ௯டத்துக்கு பயன்படுத்தும் வகையில் (கணினி) தடைப்படாத வழு வழங்கல் "Uninterruptible Power Supply - UPS"
உத்தியோகபூர்வமாக கையாளிக்கும் நிகழ்வு கல்முனைக்குடி 14 பிரிவின் கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் எம்.எம்.எம். உதுமாலெப்பை தலைமையில் கல்லூரியின் அதிபர் காரியாலயத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி, கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஏ. ஜாபீர், கல்லூரியின் அதிபா் யூ.எல்.எம். அமீன், பிரதி அதிபர்களான ஹாஜியானி. சமதா மசூது லெவ்வை, ஏ.எச். நதீரா, உதவி அதிபர்களான எம்.எஸ். மனுனா மற்றும்
கல்முனைக்குடி 14 பிரிவின் கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர், பொருளாளர், சங்க உறுப்பினர்கள் உட்பட
பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment