சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் 2022-2024 ஆம் கல்வியாண்டிற்கான உயர் தர மாணவர்களுக்கு சிப்தொர கல்வி புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வானது அண்மையில் மன்னார் அல் அஸ்ஹர் தேசியப் பாடசாலையில் இடம் பெற்றது.
மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட 331 மாணவ, மாணவிகளுக்கான புலமைப் பரிசில் திட்டமானது வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டி மெல், மன்னார் நகர பிரதேசச் செயலாளர் பிரதீப், மாவட்ட சமர்த்னதிப் பணிப்பாளர் ஏ.அலியார்,பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஞானராஜ் உள்ளிட்ட பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment