சமையல் எரிவாயுவின் திருத்தப்பட்ட விலை இன்று அறிவிப்பு?



லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திருத்தப்பட்டு புதிய விலை இன்றைய தினம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலையை இரண்டு வருடங்களின் பின்னர் மூவாயிரத்துக்கும் குறைவான விலையில் விற்பனை செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
12.5 கிலோகிராம் நிறையுடைய வீட்டு பாவனைக்கான லிட்ரோ சமையல் எரிவாயு, இரண்டாயிம் முதல் மூவாயிரம் ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.
குறைக்கப்படும் விலை தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை இன்றைய தினம் வெளியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாத ஆரம்பத்தில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 5 ஆவது தடவையாக குறைக்கப்பட்டது.
இதன்படி, தற்போது 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 3 ஆயிரத்து 186 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன் 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை ஆயிரத்து 281 ரூபாவாக குறைக்கப்பட்டது.
நாட்டில் டொலர் நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர் 2021ம் ஆண்டில் 12.5 கிலோகிராம் நிறையுடைய வீட்டு சமையல் எரிவாயு, ஆயிரத்து 493 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேநேரம், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 598 ரூபாவுக்கும், 2.5 கிலோகிராம் நிறையுடைய கொள்கலன் 289 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டது.
எவ்வாறியினும் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 5 ஆயிரத்து 175 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :