சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா நாளை



ஏயெஸ் மௌலானா-
சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவும் பரிசளிப்பு வைபவமும் நாளை புதன்கிழமை காலை 9.00 மணியளவில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கல்லூரி முதல்வர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி அவர்கள் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டை சேர்ந்த கொடைவள்ளல் ஐயூப் அஸ்ஸர் ஊனி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இதன்போது காத்தான்குடி ஜாமியா சித்தீக்கியா அரபுக் கல்லூரி முதல்வர் அஷ்ஷெய்க் எம்.ஐ.அப்துல் கபூர் மதனி அவர்கள் பட்டமளிப்பு பிரசங்கத்தை நிகழ்த்தவுள்ளார்.

இப்பட்டமளிப்பு விழாவில் 04 Batch தொகுதிகளைச் சேர்ந்த 31 மாணவிகள், மெளலவியா பட்டத்தை பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

அத்துடன் இவர்களுள் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கல்விக் கல்லூரி என்பவற்றுக்கு அனுமதி பெற்று, உயர் கல்வி கற்கும் 19 மாணவிகள், விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

மேலும், கல்லூரி மட்ட பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட மாணவிகள் பலர், பரிசு வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர்.

விழாவை முன்னிட்டு சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்படவுள்ளதாக விழா ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

கடந்த 2012-04-12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தைபா மகளிர் அரபுக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா 2018.09.23 ஆம் திகதி இடம்பெற்றது. அதன்போது 09 மாணவிகள், மெளலவியா பட்டத்தை பெற்றிருந்தனர்.

அன்றைய தினம் இக்கல்லூரிக்கான புதிய கட்டிடத் தொகுதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவரினால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :