இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருளை கொண்டு சேர்ப்பது - முக்கிய பிரமுகர்களாகும் - ஹரீஸ் எம்.பி தெரிவிப்பு!



அபு அலா-
திர்காலத்தை சீரழிக்கும் நோக்கில் திட்டமிட்டு மக்கள் மத்தியில் பரப்பப்பட்டுவரும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்தும் பணியில் இளைஞர்கள் தாமாக முன்வந்து பணியாற்ற வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

போதையையும், போதைப் பாவனைகளையும் எமது நாட்டில் இல்லாதொழிப்பதனால் எமது எதிர்கால சந்ததியினரை ஒழுக்கமுள்ளவர்களாகவும், அவர்களின் எதிர்காலத்தை சிறந்ததாகவும் உருவாக்கலாம். அதனால் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளுடன் எமது இளைஞர்கள் சுயமாக இணைந்துகொண்டு செயற்பட முன்வந்தால் மட்டுமே இதை இல்லாதொழிக்க முடியுமென பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் சுட்டிக்காட்டினார்.

அட்டாளைச்சேனை – பாலமுனை பிரதேசத்தில் இடம்பெற்ற விளையாட்டுப்போட்டி பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கிழக்கு பிராந்தியத்தில் போதைப்பொருளை அறிமுகப்படுத்தி இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள், முக்கிய பிரமுகர்கள் இருக்கின்றனர் என்று போதையொழிப்புக்கு பொறுப்பாக இருக்கும் அதிகாரி தெரிவித்தார். இதைக்கேட்டு நான் அதிர்ச்சிக்குள்ளானேன்.

கிழக்கு பிராந்தியத்தில் கல்வி, ஒழுக்கம் என்பவற்றை சீரழிக்க இந்த மோசமான பழக்கத்தை தமிழ், முஸ்லிம் இளைஞர்களிடம் உருவாக்க நாட்டிலிருந்த சில முக்கிய பிரமுகர்கள் காரணமாக இருந்தார்கள் என்ற அதிர்ச்சியான உண்மையையும் அந்த அதிகாரி எனக்கு தெரிவித்தார்.

இந்த ஆபத்திலிருந்து எமது இளைஞர்களையும், நாளைய தலைமுறையையும் பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு எம் எல்லோருக்கும் இருக்கின்றது. இந்த நிலைமையை மாற்றியமைக்க எங்களால் முடியுமானளவு பல முயற்சிகளை செய்து வருகின்றோம்.

இப்போது இளைஞர்களும் முன்வந்து இதுதொடர்பான விழிப்புணர்வை உருவாக்க வேண்டிய அவசியமுள்ளதையும் உணர்கின்றோம். சிவில் அமைப்புக்கள் இந்த வேலைத்திட்டத்தில் தங்களின் பார்வையை செலுத்த வேண்டியது மிக அவசியமாகிறது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :