இஸ்லாமிய புது வருட பிறப்பினை முன்னிட்டு கல்முனை கார்மல் பற்றிமா தேசியக் கல்லூரில் அதிபர் அருட் சகோதரர் எஸ்.ஈ.ரெஜினோல்ட் தலைமையில் நிகழ்வொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இஸ்லாமிய புதுவருடத்தை வரவேற்று நடைபெற்ற மேற்படி நிகழ்வில் சாய்ந்தமருது அல் அக்பர் ஜும்மா பள்ளிவாசல் பேஷ் இமாம் சங்கைக்குரிய மௌலவி ஏ.எச்.எம். இம்தியாஸ் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் இஸ்லாமிய புதுவருடப்பிறப்பு பற்றி உரையாற்றினார்.
இன நல்லுறவுக்கு பாலமாக அமைந்த மேற்படி நிகழ்வின் போது இஸ்லாமிய,இந்து மற்றும் கிறிஸ்தவ மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments :
Post a Comment