சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட நாவிதன்வெளி கோட்டக்கல்வி அலுவலகத்தின் கீழுள்ள சவளக்கடை வீரத்திடல் கமு/ சது/ அல்- ஹிதாயா மகா வித்தியாலயத்திற்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திறந்த ஆராதனை வெளியரங்கு நேற்று (27) உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி ஏ.எம் முனாஸிர் தலைமையில் நடைபெற்றதுடன் பிரதம அதிதி சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.செய்யது உமர் மௌலானா மற்றும் கௌரவ அதிதியாக நற்பிட்டிமுனை அல்- கரீம் பவுண்டேசன் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரின் முன்னாள் இணைப்புச் செயலாளருமான சீ.எம்.ஹலீம் (எல்.எல்.பி) ஆகியோர் கலந்துகொண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திறந்த ஆராதனை வெளியரங்கினை திறந்து வைத்தனர்.
மேலும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திறந்த ஆராதனை வெளியரங்கு தொடர்பில் பாடசாலை அதிபர் திருமதி ஏ.எம் முனாஸிர் பிரதி அதிபர் அஷ்ஷெய்க் ஏ.எம்.சாலித்தீன் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுகுழு ஆகியோரின் வேண்டுகோளிற்கிணங்க முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கல்முனை தொகுதி அமைப்பாளருமான சி.எம் முபீத் மற்றும் அல்- கரீம் பவுண்டேசன் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரின் முன்னாள் இணைப்புச் செயலாளருமான சீ.எம்.ஹலீம் (எல்.எல்.பி) ஆகியோரின் சொந்த நிதியில் இருந்து நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் ஆரம்பத்தில் அதிதிகள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.தொடர்ந்து தேசிய கீதம் பாடசாலை கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திறந்த ஆராதனை வெளியரங்கு உத்தியோக பூர்வமாக அதிதிகளால் திறந்து வைக்கப்பட்ட பின்னர் நிகழ்வின் ஆரம்பத்தில் தலைமை உரையினை அதிபர் மேற்கொண்டார்.தொடர்ந்து மாணவர்களின் நிகழ்வுகள் அதிதிகள் உரைகள் நன்றியுரை இடம்பெற்றன.
தொடர்ந்து குறித்த பாடசாலையின் பௌதீக வளங்களின் தேவை குறித்து கண்காணிப்பு நடவடிக்கையில் பிரதம அதிதியாக வருகை தந்த சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.செய்யது உமர் மௌலானா ஈடுபட்டதுடன் பாடசாலை நூலகத்தில் உள்ள நினைவுக்குறிப்பில் பதிவுகளை மேற்கொண்டு பாடசாலை அதிபர் உட்பட நிர்வாகத்தினரை பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.
இதில் ஆசிரியர்கள், அல்- கரீம் பவுண்டேசன் நிறுவனத்தின் உறுப்பினர்கள் , மாணவர்கள் ,பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment