வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் நூற்றாண்டை முன்னிட்டு பழைய மாணவர்களுக்கிடையில் நடைபெறவுள்ள கிரிக்கெட் சுற்றுத் தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வு வெள்ளிக்கிழமை இரவு பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எல்.ஜெமீல் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்ஸாப், வாழைச்சேனை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி எம்.ஐ.எஸ்.முகம்மட், டைம் ட்ரவல்ஸ் உரிமையாளர் ஐ.எம்.றிகாஸ் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலையின் ஓய்வுபெற்ற அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடர் எதிர்வரும் 22 ம் திகதி வாழைச்சேனை அந்நூர் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
1989 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆண்டு வரையான க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய பழைய மாணவர்களைக் கொண்ட 28 அணியினர் இக் கிரிக்கட் சுற்றுப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
0 comments :
Post a Comment