கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் படுத்தும் 48 அணிகள் பங்குபற்றிய மின்னொளி கிரிகெட் சமர் ஒன்றை மர்கூம் றியால் லுலு அவர்களின் ஞாபகார்த்தமாக அஹமட் பரீட் மைதானத்தில் ஏறாவூர் சில்வர் பிஸ் விளையாட்டு கழகத்தில் ஏற்பாட்டில் மிக மிக விமர்சையாக்வும் விறுவிறுப்பாக கடந்த ஆறு நாட்களாக நடைபெற்றது.
மிக மிக விறுவிறுப்பாக நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கு மட்டக்களப்பு எவகீரின் அணியினரும் ஏறாவூர் யங் அல்பத்தாஹ் விளையாட்டு கழகமும் தெரிவு செய்யப்பட்டு இறுதிப் போட்டி இரவு 11:00 மணியளவுல் அஹமட் பரீட் மைதானத்தில் நடைபெற்றது.
இறுதி நாள் நிகழ்வுக்கு முன்னாள் இராஜங்க அமைச்சர் அலிஷாஹிர் மெளலானா அவர்களோடு முன்னாள் ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் MS.நளீம் மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் அதிபர் NM.மௌஜூத் மற்றும் .HN Transport உரிமையாளர் ரஜாய்(நகரசபை வேட்பாளர்) மற்றும் ஏனைய உருப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...
அஹமட் பரீட் மைதானத்தை புடை சூழ்ந்த பல்லாயிரக்கணக்கான விளையாட்டு ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஏறாவூர் யங் அல்பத்தாஹ் விளையாட்டு கழகத்தை எதிர்த்தாடிய மட்டக்களப்பு எவகிரீன் விளையாட்டு கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு 100,000 ரூபாய் பெருமதியான பணப்பரிசையும் மர்ஹும் அல்ஹாஜ் ரியால் லுலு சவால் வெற்றிக்கிண்ணத்தையும் கைப்பற்றியது.
இரண்டாவதாக தெரிவு செய்யப்பட்ட யங் அல்பத்தாஹ் அணி 50,000 பணப்பரிசை பெற்றுக்கொண்டது.
சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட எவ கிரீன் அணியினருக்கும் இரண்டாம் இடத்தைப் பெற்ற யங் அல்பத்தாஹ் விளையாட்டு கழகத்தினருக்கும் வாழ்த்துக்கள் பராட்டுக்கள்.
இன் நிகழ்வில் விசேட அம்சமாக பாடசாலை கிரிகெட் தொடரில் சிறப்பாக பிரகாசித்த அறபா வித்தியாலயத்தின் மாணவர்கள் மற்றும் விளையாட்டு பயிற்று விப்பாளர் ஆகியோர் கௌரவிக்கப்படனர்.
0 comments :
Post a Comment