இளைஞர், யுவதிகளிடையே மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு பொருத்தமான இடத்தை வழங்கும் நோக்கில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 43வது தடவையாக நடாத்தப்படுகின்ற தேசிய இளைஞர் விருதுப் போட்டிகள் மாகாணம் மற்றும் தேசிய மட்டத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
15 வயத்திற்கும் 29 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்காக தமிழ்மொழி மூலமான அறிவிப்பாளர், பேச்சுப் போட்டி, இளம் பாடகர் போன்ற போட்டிகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (25) சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
1994.03.24 ஆம் திகதிக்கு பின்னரும் 2008.03.24 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்கள் இப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் சேவை அலுவலகர் எம்.எம்.ஸமீலுல் இலாஹி (0772326068) அறிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment