இவ்வருடம் வீடு நிர்மாணத்திற்காக எமது ஏறாவூர் நகரசபையில் விண்ணப்பித்து அனுமதி பெறப்பட்ட நபர்களுக்கு தென்னை பயிர் செய்கை சபையால் "உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்" எனும் தொனிப் பொருளில் வீட்டுத் தோட்ட திட்டத்தின் கீழ் நபர் ஒருவருக்கு இரண்டு தென்னை நாற்று வீதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வானது இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் ஏறாவூர் நகரசபை மண்டபத்தில் நகரசபையின் செயலாளர் MHM_ஹமீம் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் தென்னை பயிர்ச் செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் P ரவிராஜ், ஏறாவூர் நகரசபையின் நிதி உதவியாளர் நிஸா லாபிர், வருமான பரிசோதகர் N வாஹித், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ACM சப்றாஸ், M முஸம்மில், செல்வி, சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் C நிதர்சினி, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் றுஷைதா ரசாக் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்
இத்திட்டத்தின் ஊடாக எமது ஏறாவூர் நகரசபை பிரிவின் கீழ் சுமார் 73 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு தென்னை நாற்றுக்கள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment