நவீன நூலக நடைமுறைகள் எனும் தலைப்பில் நூலக கல்வி சார் / கல்வி சாரா ஊழியர்களுக்கான மூன்று நாள் பயிற்சிநெறி.



தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தில் கடமையாற்றும் கல்விசார் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கான மூன்று நாள் பயிற்சிநெறி கடந்த 19, 20 & 21. 07. 2023 திகதிகளில் (புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை) ஆகிய தினங்களில் கிழக்குப் பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், கொழும்பு தேசிய நூலகம் , தேசிய ஆவணவாக்கள் சபை மற்றும் பேராதனை பல்கலைக்கழகம் போன்றவற்றில் நடைபெற்றது. (Eastern University of Sri Lanka , Colombo University Main Library , Colombo University Science Modern High Tech Library , Colombo National Library , National Archives and University of Peradeniya )

இப் பயிற்சி நெறியானது பல்கலைக்கழக நூலகர் எம். எம். றிபாயுடீன் அவர்களின் பூரண ஏற்பாட்டில் (Staff Development Centre) பல்கலைக்கழக ஊழியர் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி சல்பியா ஜலீல் அவர்களின் நெறிப்படுத்தலில் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் அவர்களின் அனுமதியுடன் நடைபெற்றது.

இப்பயிற்சி நெறியின் முதல் நாள் அங்குரார்ப்பண நிகழ்வு கிழக்குப் பல்கலைக்கழக நூலகர் Dr. W.J ஜெயராஜ் தலைமையில் நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகர் எம். எம். றிபாயுடீன் , சிரேஸ்ட உதவி நூலகர்களான எம்.சி.எம். அஸ்வா் , எஸ்.எல்.எம். சஜீர் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட உதவி நூலகா்களான திரு. MN. ரவிக்குமார் , திரு. S சாந்த ரூபன், திருமதி N. காயத்ரி, திருமதி L. ஜெகதீஸ்பரன் மற்றும் நூலக உதவிப் பதிவாளர் திரு. V. பிரகாஷ் அவர்களும் கலந்து கொண்டனர்.

அங்குரார்ப்பன நிகழ்வை ஆரம்பித்து வைத்து பேசிய கிழக்குப் பல்கலைக்கழக நூலகர் டாக்டர் W.J. ஜெயராஜ் அவர்கள் உரையாற்றுகையில்

தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலக உத்தியோகத்தர்கள் எமது கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தை தெரிவுசெய்து எங்களது சேவைகள் மற்றும் வளங்கல் பற்றி அறிவதற்கும் அதிலிருந்து கற்றுக் கொள்வதற்குமாக வருகை தந்திருக்கின்ற தென்கிழக்கு பல்கலைக்கழக நூலக உத்தியோகத்தர்களை கிழக்கு பல்கலைக்கழக நூலகம் சார்பாக வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
மேலும் இதனை ஒழுங்கு செய்து இங்கு அழைத்துவந்த பல்கலைக்கழக நூலகர் எம். எம். றிபாயுடீன் அவர்களுக்கு நான் நன்றி கூறுகின்ற அதேவேளை இவ்விரு பல்கலைக்கழக நூலக உத்தியோகத்தர்களும் தாங்கள் எதிர்காலத்தில் எமது இரு நூலகங்களுக்கு இடையில் ஏற்படுகின்ற தொழில் மற்றும் சேவைரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டுமென்றும் அதன்மூலம் மாணவர்களுக்கு ஒரு சிறந்த சேவையினை வழங்குவது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் இப்ப பல்கலைக்கழகமானது 1981 ஆம் ஆண்டு பல்கலைக்கழக கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டு 1986 ஆம் ஆண்டு பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டதென்றும் அவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட பல்கலைக்கழக நூலகத்தினை கட்டியெழுப்புவதில் தாங்கள் பாரிய சவால்களை எதிர்கொண்டதாகவும் அந்த சவால்களுக்கு எமது நூலக உத்தியோகத்தர்கள் தங்களாலான முழு ஒத்துழைப்புகளையும் அர்ப்பணிப்புடன் செய்ததனை இங்கு சுட்டிக்காட்டி தனதுரையை முடித்தாா்.

அதனைத் தொடர்ந்து தென்கிழக்கு பல்கலைக்கழக நூலகர் எம். எம். றிபாயுடீன் அவர்கள் பேசுகையில் முதலில் இவ்வாறானதொரு நிகழ்வினை ஏற்பாடு செய்துதந்த பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் அவர்களுக்கும் ஊழியர் மேம்பாட்டு நிலைய பணிப்பாளர் டாக்டர் சல்பியா ஜலீல் அவர்களுக்கும் நன்றி கூறி தொடர்ந்து பேசுகையில் கலாநிதி ஜெயராஜ் அவர்கள் பேசியது போல் இரு பல்கலைக்கழகங்களும் எமது தாய் மொழியில் சேவைகளை வழங்குபவர்களாக இருக்கின்றபடியினால் எமக்குள் இருக்கின்ற நூலக சேவை வழங்கல்கள் சம்பந்தமான பிரச்சினைகளை இலகுவில் தீர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் அதன் மூலம் எமது மாணவர்களுக்கு ஒரு சிறப்பான நவீன நூலக நடைமுறைகள் சேவையினை வழங்க முடியும் அதேபோல் ஊழியர்களும் தங்களுக்குள்ளான பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் எதிர்காலங்களில் இரு நூலகங்களும் சேர்ந்து தங்களுக்குள் வளங்களை பகிர்ந்து கொள்ள முடியும் என்றும் கூறினார்.
மேலும் நூலகர் றிபாயுடீன் அவர்கள் கிழக்குப் பல்கலைக்கழக நூலகர் மற்றும் நூலக உத்தியோகத்தர்களை தென்கிழக்கு பல்கலைக்கழக நூலகத்துக்கு சினேக பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் அழைப்பொன்றை விடுத்திருந்தாா்.
இறுதியாக நூலகர் எம். எம். றிபாயுடீன் அவர்களினால் கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்துக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்ட ஒரு தொகுதி நூல்கள் நூலகர் ஜெயராஜ் அவர்களிடம் அன்பளிப்பு செய்யப்பட்டது.

இரு நூலகர்களினது உரையினை தொடர்ந்து கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகர்களினால் அங்குள்ள சேவைகள் மற்றும் வளங்கள் பற்றி தென்கிழக்கு நூலக உத்தியோகத்தர்களுக்கு விரிவான பயிற்சிகளையும், விளக்கங்களையும் கொடுத்தனர்.
இப்பயிற்சிநெறியின் முதல் நாள் கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தில் கீழ்குறிப்பிடப்படும் தலைப்புகளில் தென்கிழக்கு பல்கலைக்கழக நூலக உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

A ) Training on KOHA ILMS, specially cataloguing modules MARC, punctuation, standard practices in computer cataloguing and overview of the total library system.

B) Customer care and motivation training.

 Library Tour

 Brief Meeting of Staff Networking (SEUSL & EUSL)

இப்பயிற்சிகளின் வளவாளர்களாக பின்வருவோர் கலந்துகொண்டனர்.

1. Dr. W.J Jayaraj – Librarian

2. Mr. N. Ravikumar – Senior Assistant Librarian

3. Mr. S. Santharooban – Senior Assistant Librarian

4. Mrs. N. Gayathiri – Senior Assistant Librarian

5. Mrs. L. Jegatheesparan – Senior Assistant Librarian

6. Mr. V. Pragash – Assistant Registrar / Library Services.

இப் பயிற்சி நெறியின் ஒருங்கிணைப்பாளர்களாக நூலக சிரேஷ்ட பதவிநிலை உத்தியோகத்தர் சி. எம். ஏ முனாஸ் அவர்களும் ஊழியர் மேம்பாட்டு நிலைய சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் OLM. முனவ்வர் அவர்களும் செயற்பட்டனர்.
இறுதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகர் எம். சி. எம். அஸ்வர் அவர்களின் நன்றி உரையுடன் முதல் நாள் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.






















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :