ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ், மாகாண விஷேட செயற்பாடுகளுக்காக குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடையில் (PSDG) ரூபா. 13 மில்லியன் செலவில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மேற்பார்வையோடு மட்டக்களப்பு - திக்கோடை பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆயுர்வேத மத்திய மருந்தகத்தை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.செந்தில் தொண்டமான் திறந்து வைத்து பொதுமக்கள் பாவனைக்கும் கையளித்து வைத்தார்.
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் தலைமையில் நேற்று (12) இடம்பெற்ற இவ்விழாவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் எம்.செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த ஆயுர்வேத மத்திய மருந்தகத்தை திறந்து வைத்து பொதுமக்கள் பாவனைக்கும் கையளித்து வைக்கப்பட்டது.
இவ்விழாவுக்கு இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கணகமுத்து கிரிஷ்னப்பிள்ளை, வெல்லாவெளி பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி, புதுக்குடியிருப்பு தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் (திருமதி) ஜே.பாஸ்கரன், நிந்தவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.ஏ.நபீல், மாகாண சுதேச மருத்துவ திணைக்கள திட்டமிடல் பிரிவு வைத்தியர் எஸ்.சதீஸ் உள்ளிட்ட அரச உயரதிகாரிகள், வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment