இதன்போது யூலைக்கலவரத்தில் உயிர் நீத்தவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் அவர்கள் மீண்டும் ஓர் கறுப்பு ஜூலைக்கு அரசு வித்திடுவதாக குறிப்பிட்டார். மேலும் கருத்து தெரிவித்த அவர் பொலிஸ் அதிகாரம் இல்லாத அதிகார பரவலாக்கலில் நாம் எவ்வாறு எமது மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து பாதுகாக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அம்பாரைமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன் ஞா.சிறிநேசன் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் காரைதீவுப் பிரதேசசபை தவிசாளர் கி.ஜெயசிறில் தமிழசுக்கட்சியின் இளைஞர் அணித்தலைவர் உட்பட தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment