பாரிய மரக்கிளையொன்று உடைந்து விழுந்ததில் நீதிமன்றத்தினால் தடுத்துவைத்திருந்த பல வாகனங்கள் சேதமடைந்த சம்பவமொன்று மட்டக்களப்பு -ஏறாவூர்ப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
25.07.2023 அதிகாலை 12.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தினால் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் அருகிலுள்ள கோயில் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள்மீது அங்கிருந்த அரச மரத்தின் பாரிய கிளையொன்று முறிந்து விழுந்துள்ளது. இதனால் பல வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னரும் இங்கு மரக்கிளையொன்று முறிந்து விழுந்தது. இதனால் சேதம் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
முறிந்து விழுந்து மரத்தின் பாகங்கள் பொதுமக்களின் உதவியுடன் அகற்றப்பட்டன.
0 comments :
Post a Comment