வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்ட கல்குடா பிரிமியர் லீக் (KPL-2023 ) உதைப்பந்தாட்ட சுற்றுத்தொடரின் சிறந்த கோல்காப்பாளர் விருதினையும், கோல்காப்பாளர் கையுறையும் வளர்பிறை விளையாட்டுக் கழகத்தின் கோல் காப்பாளர் அன்ஸார் பின் ஆஸிக் பெற்றுக்கொண்டார்.
ஏற்கனவே ACMC உதைப்பந்தாட்ட சுற்றுத்தொடரின் போது தொடர்சியாக இரு வருடங்கள் வளர்பிறை விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த கோல்காப்பாளர்களான முஹம்மது ஸப்றான் மற்றும் முஹம்மட் பர்விஸ் ஆகிய இருவரும் சிறந்த கோல்காப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments :
Post a Comment