செயற்கை நுண்ணறிவுக்கான அரசாங்க மூலோபாய குறியீட்டில் உலகின் முதல் நாடாகத் தேர்வானது சவுதி அரேபியா




கலாநிதி எம்.பி.எம்.இஸ்மாயில் மதனி-
லக அளவில் செயற்கை நுண்ணறிவை வளர்ப்பதற்கான திட்டங்களை அரசாங்க மட்டத்தில் முன்னெடுத்த நாடுகள் பற்றிய ஆய்வில் சவுதி அரேபியா உலகின் முதல் நாடு எனும் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது. "Tortoise Intelligence" எனும் நிறுவனத்தினால் உலகின் 60 நாடுகளுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சவுதி அரேபியா முதலாவது இடத்தையும் ஜேர்மன் இரண்டாவது இடத்தையும் சீனா மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.
"Tortiose Intelligence" நிறுவனம் சர்வதேச மட்டத்தில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதன் வளர்ச்சி தொடர்பில் ஆய்வு செய்யவென இத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டு அதனை வெளியிட்டு வருகின்றது.
இதன்படி செயற்கை நுண்ணறிவின் உலகளாவிய நிலையை ஆய்வு செய்யெவன ஏழு பிரதான அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு 100 க்கும் மேற்பட்ட விடயங்களை கவனித்து இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது: அரசாங்க உத்திகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன்கள், உட்கட்டமைப்பு, தொடர் செயற்பாடு மற்றும் வர்த்தகம். இதில் செயற்கை நுண்ணறிவுக்கான அரசாங்க மூலோபாயத் திட்டங்களுக்கான குறியீட்டில் சவுதி அரேபியா முதல் இடத்தைப் பெற்றது, மேலும் வெளியிடப்பட்ட முடிவுகளின்படி செயற்கை நுண்ணறிவை வளர்ப்பதில் உலகின் 31வது நாடாக பதிவானது.

சவுதி அரேபியா செயற்கை நுண்ணறிவை வளர்ப்பதற்கான திட்டங்களை ஆரம்ப காலத்திலிருந்தே வகுத்துச் செயற்பட்டு வருகின்றது. 2019ல் மன்னரின் கட்டளைப்படி இதற்காக "sdaya" எனும் நிறுவனம் உருக்கப்பட்டது தேசிய மட்டத்தில் செயற்கை நுண்ணறிவோடு தொடர்புடைய அனைத்து விடயங்களுக்குமான மையமாக இந்நிறுவனம் செயற்படுகின்றது.

பட்டத்து இளவரசர் முஹம்மதின் ஸல்மானே இதன் தலைவராக செயற்படுகின்றார். அவருடைய சீரிய வழிகாட்டலில் இவ்வுயர் நிலையை அடைந்திருப்பது 2030 திட்டத்தின் ஒரு மயிற்க்கல்லாகவே பார்க்கப்படுகின்றது. 2030ல் சவுதி அரேபியாவினை அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி அடைந்த தன்னிறைவான ஒரு நாடாக மாற்றுவதே அமீர் முஹம்மத் பின் ஸல்மான் அவர்களின் நோக்கமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :