எதிர்கால பாடசாலைகள் அபிவிருத்தி தொடர்பில் ஆய்வு நோக்கு அறிக்கை தயாரித்தல் தொடர்பான கருத்தரங்கு !!



நூருல் ஹுதா உமர்-
ட்டக்களப்பு மத்தி கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில் வலய கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம். அமீர் அவர்களின் தலைமையில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஐ.எம். அஹ்சாப் அவர்களின் வழிகாட்டுதலில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலை அதிபர்களுக்குமான ஆய்வு நோக்கு அறிக்கை தயாரித்தல் "Proposal Development" சமபந்தமான கருத்தரங்கு 13.07.2023 வியாழக்கிழமை, ஏறாவூர் அல்-முனீறா தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் வளவாளராக பிரபல ஊக்கமூட்டல் பேச்சாளரும் (motivational Speaker) இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் கணக்கியல் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளருமான கலாநிதி எம்.சி.ஏ. நாசர் வளவாளராக கலந்து கொண்டதுடன் கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள 80 இற்கு மேற்பட்ட பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :