கிழக்கு ஆளுநருடன் கைக்கோர்த்த அரச வைத்திய அதிகாரிகள் சம்மேளனம்!



அபு அலா -
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சம்மேளன தலைவர் வைத்தியர் தர்ஷன சிறிசேன மற்றும் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கேக்குமிடையிலான கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில், கிழக்கு மாகாணத்தில் ஆளுநரால் முன்னெடுக்கப்படும் சேவைகளுக்கு அரச வைத்திய அதிகாரிகள் சம்மேளனம் (GMOA) ஒத்துழைப்பு வழங்குவதாகவும், ஆளுநரால் சுகாதார துறைக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் வெற்றிப்பெற வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் தங்களுடைய சேவைக்காக தங்களை முழுமையாக அற்பணிபதற்காக ஆளுநர் செந்தில் தொண்டமான் பாராட்டுக்களை தெரிவித்ததோடு, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :