இந்தத் திட்டத்தின் மூலம் ஏறாவூர் பிரதேசத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல சுய தொழில் திட்டங்கள் அமைச்சர் நசீர் அகமட்டினால் முன்வைக்கப்பட்டுள்ளன.
இத்திட்டங்களின் திட்டமிடுதலை மேற்கொள்ளும் பொருட்டு அமைச்சர் நசீர் அகமதின் வேண்டுகோளின் பேரில் துபாய் நாட்டுப் பிரதிநிதிகள் நேற்று ஏறாவூர் பகுதிக்கு விசேட ஹெலிகாப்டர் மூலம் வருகைதந்தனர். ஏறாவூர் பிரதேசத்தின் எல்லைப்புறகிராம பிரதேசங்களுக்கு சென்று மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்து மக்களுடன் கலந்துரையாடி தேவைகள் பற்றி கேட்டு அறிந்து கொண்டனர்.
இத்திட்டத்தின் ஊடாக பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு கோழி ,ஆடு, மாடு வளர்ப்பு விவசாய செய்கைகள் மீன் வளர்ப்பு உட்பட பல்வேறு சுய தொழில் திட்டங்கள் பற்றி பிரதேச மக்களால் தனது கோரிக்கைகள் துபாய் நாட்டுப் பிரதிநிதிகளுக்கு முன்வைக்கப்பட்டன.
இந்த துபாய் நாட்டு உதவித் திட்டத்தில் ஏற்கனவே அமைச்சர் நஷீர் அஹமட்டின் வேண்டுகோளில் மேற்கொள்ளப்பட்டு வந்த திட்டங்களின் முன்னேற்றங்கள் பற்றியும் துபாய் நாட்டுப் பிரதிநிதிகள்நேரில் கண்டறிந்ததுடன் அதன் வளர்ச்சி பற்றியும் விசேட கலந்துரையாடல்களை நடாத்தினர். இதேவேளை துபாய் நாட்டுப் பிரதிநிதிகள் ஏறாவூர் பொதுச்சந்தை பகுதிக்கு விஜயம் செய்து பொதுச்சந்தை பகுதியில் தொழுகைக்கான பள்ளிவாசல் கட்டிட நிர்மாணம் மற்றும் பொதுச் சந்தையின் வளர்ச்சி பற்றியும் கலந்துரையாடினர்.

0 comments :
Post a Comment