கராட்டே கறுப்புப் பட்டி வீரர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு



அஸ்ஹர் இப்றாஹிம்-
டந்த 17.03.2022 இல் நடைபெற்ற கராத்தே தரப்படுத்தல் பரீட்சையில் சித்தியடைந்த International Martial arts Association, Sri Lanka Branch மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு International Martial arts Association, Sri Lanka Branch இன் தலைமை பயிற்சி நிலையமான சாய்ந்தமருது Honbu Dojo வில் சங்கத்தின் பிரதம போதனாசிரியரும், இலங்கைக்கான பிரதிநிதியுமான முகம்மத் இக்பால் அவர்களின் தலைமையில் கடந்த அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக International Martial arts Association, Sri Lanka Branch இன் பொது செயலாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எம்.கே.இப்னு அஸார் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதல்களை வழங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் Black Belt 3rd Dan, 2nd Dan, 1st Dan, Shodan-Ho, 1st Kyu ஆகிய தரங்களில் சித்தியடைந்தவர்களுக்கு IMA சான்றிதழ்கள் மற்றும் Sri Lanka Karate do Federation இன் டிப்ளோமா சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.

அத்துடன் நான்கு புலன்களினால் சாதனை படைத்ததன் காரணமாக Cholan World Record புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்த எம்.எஸ்.எம்.பர்ஸான் மற்றும் ஸ்ரீ லங்கா தேசிய கராத்தே அணியில் இடம்பிடித்த ஏ.கே.எம்.ஹஸ்னத் கான் ஆகியேருக்கு விசேட விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :