சிலோன் மீடியா போரத்தின் நான்காவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற "வர்ண இரவு ஒன்றுகூடலும், ஊடகவியலாளர் கௌரவிப்பும்" மீடியா போரத்தின் தலைவர் ரியாத் ஏ மஜீத் தலைமையில் சனிக்கிழமை இரவு மாளிகைக்காடு வாபா றோயலி மண்டபத்தில் நடைபெற்றது.
ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் கொழும்பில் இடம்பெறவுள்ள பிரமாண்ட ஆண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வாக நடைபெற்ற இந்நிகழ்வில் இந்திய- இலங்கை ஊடகத்துறைக்கு பாலமாக அமைந்திருந்த ஊடகவியலாளர் திருச்சி ஷாஹுல் ஹமீட் சிலோன் மீடியா போரத்தினரால் பொன்னாடை போத்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டர்.
சிலோன் மீடியா போரத்தின் பொருளாளர் யூ.எல்.என். ஹுதா உமரின் ஆரம்ப உரையுடன் ஆரம்பமான இந்த வர்ண இரவு நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண காணியமைச்சின் பதில் செயலாளரும், மாகாண நிர்வாக பிரதிப்பிரதம செயலாளருமான ஏ. மன்சூர், பொதுசேவை ஆணைக்குழு முன்னாள் உறுப்பினர் சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம். சலீம், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாசில், அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல் சம்மேளனத்தலைவர் எஸ்.எம். சபீஸ், கல்முனை கல்வி மாவட்ட பிரதம பொறியலாளர் ஏ.எம். சாஹீர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை கல்முனை நிறைவேற்று பொறியலாளர் எம்.எம். முனாஸ், ஈ.சி.எம். நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் சட்டத்தரணி பொறியலாளர் யூ.கே. நாபீர், இலங்கை அடிப்படை மனித உரிமைகள் அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எம்.ஏ. நளீர், அமானா நற்பணி மன்ற தலைவர் ஏ.எல். பரீட் ஹாஜி உட்பட ஊடக அமைப்புக்களின் பிரதானிகள், ஊடகவியலாளர்கள், பிரபல கலைஞர்கள், சிலோன் மீடியா போரத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், சிலோன் மீடியா போரத்தின் அங்கத்தவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment