கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி க.பொ.த.உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் தென்கிழக்குபலகலைக்கழகத்திற்கு ஆசிரியர்களுடன் கடந்த திங்கள் ( 24)விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
தென்கிழக்கு பல்கலைக் கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்திற்கு சென்ற மாணவர் குழுவினர் பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடமிருந்து உசார்த்துணை மற்றும் வழிகாட்டல் ஆலோசனைகளை பெற்று எதிர்வரும் உயர்தரப் பரீட்சைகளில் திறமையாக சித்தியடைவதற்கான யுக்திகளை பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த விஜயம் அமைந்திருந்தது.
பல்கலைக்கழக உப வேந்தரும் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவருமான பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் அவர்களின் ஆலோசனையின் பேரில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மேற்படி வழிகாட்டல் ஆலோசனையின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பீடத்தலைவர், நூலகர், சிரேஷ்ட உதவி நூலகர்கள் இம் மாணவர்களுக்கு தேவையான சகல ஏற்பாடுகளையும் செய்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும.
0 comments :
Post a Comment