மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் காயன்குடா விவசாய போதனாசிரியர் பிரிவில் K.லிங்கேஸ்வர ராஜா தலைமையில் உழுந்துஅறுவடை விழா இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக V.பேரின்பராஜா கலந்து கொண்டு உழுந்து அறுவடையை சிறப்பித்ததுடன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் உப உணவுச் செய்கை ஊக்குவிப்பதன் மூலம் இன்றைய பொருளாதாரத்தை வலுவூட்டலாம் எனவும் இதற்காக 100•/• மானிய அடிப்படையில் MI1 இன் உழுந்து விதைகள் சுய விதை உற்பத்திற்காகவும் வழங்கப்பட்டுள்ளதுடன் அதற்கான அறுவடை விழா தற்போது இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு வடக்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் E.சுகுந்ததாசன், பாடவிதான உத்தியோகத்தர் - மறுவயற் பயிர் N.லக்ஸ்மன் , விவசாய போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் தளவாய் பிரதேச முன்னோடி விவசாயிகள் பலரும் பங்குபற்றினர்.குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment