அம்பாறை மாவட்டத்திலுள்ள நிந்தவூர் விவசாய விரிவாக்கல் பிரிவு மற்றும் சம்மாந்துறை விவசாய விரிவாக்கல் பிரிவிற்குட்பட்ட பயிர் செய்யப்பட்டு தற்போது அறுவடைக்கு தயாராகவுள்ள வயல் நிலங்களில் "கிலுகிலுப்பான் " எனும் பண்டிச் சம்பா இனம் மிகையாக வளர்ச்சியடைந்து பிரதான பயிர்களுக்கு சூரிய ஒளி செல்லுவதை தவிர்த்து , அதற்குரிய பசளைகளையும் உறிஞ்சி கதிர் பறிவதை குறைத்தும் வருகின்றது.
இதனால் விவசாயிகளின் இப் போக விளைச்சல் குறையலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட விவசாய உயர் அதிகாரிகள் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி இந்த பண்டிச் சம்பா நெல் இனத்தை அடியோடு இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச விவசாயிகள் கேட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment