தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் மீதான விமர்சனமும், அவரது பிடிவாதமும்



தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அது ஓர் பேசுபொருளாக இருந்துவருகின்ற நிலையில், அங்கு பணிபுரிகின்ற ஊழியன் என்ற அடிப்படையில் இன்றைய அதிகமான விமர்சனங்களுக்கு மத்தியில் ஏன் பதில் வழங்கவில்லை என்று என்னை நோக்கி பலரும் கேள்வி எழுப்புகன்றனர்.

தெ.கி.ப.கழகத்தின் உபவேந்தர்களை விமர்சிப்பது இது முதல் முறையல்ல. பல்கலைக்கழகம் ஆரம்பித்ததிலிருந்து ஒவ்வொரு உபவேந்தரும் ஏதோ ஒரு வகையில் விமர்சிக்கப்பட்டனர். அதனால் விமர்சனங்களை கேட்டுக் கேட்டு அலுத்துவிட்டது.

தற்போது சமூக வலைத்தளங்களின் முன்னேற்றமும், அதன் பாவனையும் அதிகரித்த காரணத்தினால் இன்றைய உபவேந்தர் மாத்திரம் விமர்சிக்கப்படுகின்றார் என்ற தோற்றம் காணப்படுகின்றது.

தெ.கி.ப.கழகத்தின் முதலாவது உபவேந்தர் எம்.எல்.ஏ. காதர் சேர் அவர்கள் யாருக்கெல்லாம் உதவி செய்தாரோ அவர்களது கழுத்தறுப்புக்கு மத்தியில் கடுமையான மனச்சோர்வுடனேயே இறுதி நேரத்தில் ஒய்வு பெற்றார்.

அதன்பின்பு உபவேந்தராக பதவிவகித்த கலாநிதி ஹுசைன் இஸ்மாயில் அவர்களை கொலை செய்யும் நோக்கில் உபவேந்தர்மீது துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டது. இறுதியில் பொலிசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்தார்.

அதுபோல் சம்மாந்துறையை சேர்ந்த கலாநிதி எம்.எம். இஸ்மாயில் அவர்கள் உபவேந்தராக பதவி வகித்தபோது அவருக்கும் பலத்த எதிர்ப்புக்கள் இருந்தது. ஆனாலும் அன்றைய உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸ்ஸாநாயக்க அவர்களின் பின்புல உதவியுடன் தனது பதவியை நிறைவு செய்தார்.

பின்பு பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்கள் உவேந்தராக கடமையாற்றியபோது பலத்த எதிர்ப்புக்கள் மாத்திரமின்றி கொலை அச்சுறுத்தல்களும் இருந்தது. இவைகள் எல்லாம் குறிப்பிட்டவர்களைதவிர, சாதாரண பொதுமக்கள் அனைவரும் அறிந்திருந்ததில்லை.

ஆனால் சமூகவலைத்தளத்தின் பாவனைகள் அதிகரித்துக் காணப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில் கடந்த உபவேந்தர்களிலிருந்து மாறுபட்ட கோணத்தில் இன்றைய உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் மீதான விமர்சனங்கள் உள்ளது.

அதாவது விமர்சனங்களுடன் நின்றுவிடாமல் அவரை பதிவிநீக்கும் நோக்கில் அவருக்கு எதிரான சக்திகள் களம் இறங்கியுள்ளனர். இதற்குக் காரணம் பலமான அரசியல் பின்னணி இல்லாமை அத்துடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் நாட்டின் அரசியல் சூழ்நிலையில் காணப்படுகின்ற பலயீனங்களே இதற்கு காரணம் என்று கூறலாம்.

தான் கடுமையாக விமர்சிக்கப்படுகின்ற சூழ்நிலையில் தனக்கு எதிரான சக்திகளுடன் சமரசம் செய்துகொண்டு தனது பதவியை தக்கவைக்க முடியும். ஆனால் அந்த நோக்கம் இன்றைய உபேந்தரிடம் காணப்படுவதாக தெரியவில்லை. மாறாக பதவியை இழந்தாலும் பருவாயில்லை தான் எந்த தவறும் செய்யாத நிலையில் ஏன் யாருக்கும் அடிபணிய வேண்டும் என்னும் நோக்கில் தனது கொள்கையில் பிடிவாதமாகவும், உறுதியாகவும் இருப்பதனை காண முடிகின்றது.

அடுத்த பதிவில் இதன் தொடரை எதிர்பாருங்கள்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :