சாய்ந்தமருது தோணா வீதியில் ஏற்பட்டிருந்த நீர் ஒழுக்கை சரி செய்வதற்காக நீர் விநியோக சபையின் சாய்ந்தமருது நிலைய பொறுப்பதிகாரி ஏ.ஆர்.எம். அஷ்ஹர், தலைமையில் 2023.07.15 ஆம் திகதி காலைமுதல் நீர் விநியோக சபையின் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நீர் விநியோகத்தில் உள்ள, பாரிய குழாயில் ஏற்பட்டுள்ள குறித்த நீர் ஒழுக்கை திருத்தும் பணி இரவு 10.00 மணியையும் தாண்டி இடம்பெற்றுவரும் நிலையில் வேலைகளை கண்காணிக்க நீர் விநியோக சபையின் அம்பாறை மாவட்ட பிராந்திய முகமையாளர் யூ.கே.முஜாஹித், கல்முனை நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்.சதாத் மற்றும் வேலை மேற்பார்வையாளர் எம்.எஸ்.எம். சபான் உள்ளிட்டவர்களும் களத்தில் நின்று ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
சாய்ந்தமருதில் பெரும்பாண்மையான பாவனையாளர்கள் நீர் விநியோக சபையின் நீரையே நம்பியுள்ளதால் நீண்ட நேரமாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதால் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment