கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலய நூற்றாண்டு விழா!



கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலய நூற்றாண்டு விழாவானது வித்தியாலய அதிபர் S.அரசரெட்ணம் தலைமையில் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்டு கல்வி, கலை, கலாச்சாரம், விளையாட்டு என பல துறைகளிலும் தமது சாதனைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வெற்றிக் கிண்ணங்களையும் வழங்கி வைத்ததில் மகிழ்ச்சி அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற அதிதிகள் கெளரவிப்பின் போது நூற்றாண்டு நினைவு மலரான "கதிராழி" எனப்படும் நூலும் எமக்கு வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் குறித்த பாடசாலையில் நிலவிவரும் பௌதீக மற்றும் மனிதவள தேவைகள் தொடர்பிலும், ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பிலும் அந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்திருந்த கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ. A.அரவிந்தகுமார் அவர்களுடன் இணைந்து ஆராய்ந்திருந்தோம்.

மேலும் குறித்த நிகழ்விற்கு கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், எமது கட்சியின் பொதுச் செயலாளர் தம்பி பூ.பிரசாந்தன், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் ஆனந்தரூபன் உட்பட பிரதேச செயலாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வுநிலை அதிபர்கள் மாணவர்கள் என பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :