மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் அனுசரனையில் 32 அணிகளை உள்ளடக்கி நடாத்தப்பட்ட DAN TV உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் YSSC அணி நேற்று இடம்பெற்ற இறுதிப்போட்டியில் முனைக்காடு ராமகிருஷ்னா விளையாட்டுக்கழகத்தை முஸ்தாக்கின் கோலின் உதவியுடன் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி YSSC அணி தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக DAN TV சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதுடன் 300000/- பணப்பரிசினையும் பெற்றுக்கொண்டனர்.
இச்சுற்றுப்போட்டியை சிறப்பாக சுற்றுப்போட்டியை நடாத்தி முடித்த DAN TV குழுமத்தினருக்கும் மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தினருக்கும் ஆதரவளித்த அனைத்து YSSC ரசிகர்களுக்கும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டி வரும் Shakeel தலைமையிலான சம்பியன் வீரர்களுக்கும் அணியினர பயிற்றுவிப்பாளராகவும் YSSC அணியினது முதுகெலும்பாக திகழும் M.M.முகைதீன் அதிபருக்கும் இச்சுற்றுப்போட்டியில் 2ம் இடம் பெற்ற முனைக்காடு ராமகிருஷ்னா விளையாட்டுக்கழகத்தினருக்கும் YSSC நிர்வாகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
0 comments :
Post a Comment