''Eascca Home Care Training'' செயற்திட்டத்தின் இரண்டாவது நாள் நிகழ்வு



ஏறாவூர் சாதிக் அகமட்-
லங்கையின் சகல இல்லங்களிலும் நோயாளர்களை முறையாக பராமரிக்கத் தெரிந்தவர்களை (Care Givers) உருவாக்குதல் எனும் தொனிப்பொருளில் Eascca Hospice இனால் ஆரம்பிக்கப்பட்ட முற்றிலும் இலவசமான ''Eascca Home Care Training'' செயற்திட்டத்தின் இரண்டாவது நாள் நிகழ்வு இன்று நடைபெற்றது.

15 பயிலுனர்கள் இதில் கலந்துகொண்டார்கள். இதில் வைத்தியசாலைகளில் பணியாற்றுபவர்கள், தாதிய உதவியாளர் மாணவர்கள் போன்றோரோடு வீடுகளில் நோயுற்று முடங்கியிருக்கும் தமது அன்புக்குரியவர்களை முறையாகப் பராமரிக்கவேண்டும் என்ற ஆவலில் வந்தவர்களும் உள்ளடங்குவர்.

இன்றைய அமர்வில், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் திரு.தட்சணாமூர்த்தி ''தன் சுகாதாரம் பேணுதல் (Basic Care - Personal Hygine) எனும் தலைப்பில் விரிவுரை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் திரு.தட்சணாமூர்த்தி அவர்களும் தாதிய உத்தியோகத்தர் முபாரிஸ் அவர்களும் இணைந்து ''நோயாளர்களுக்கான படுக்கைத் தயாரிப்பு(Linen Changing)'' எனும் விடயத்தை விரிவாகவும் தெளிவாகவும் விளக்கி அனைவருக்குமான பயிற்சிகளையும் வழங்கினார்கள்.

மீண்டும் 2 மணியளவில் ஆரம்பித்த பாடவேளையில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் MSM லாபீர் ''மன அழுத்த முகாமைத்துவம்(Stress Management)'' பற்றிய கருப்பொருளில் விரிவுரை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து இறுதியாக ''மருந்து முகாமைத்துவம் (Drugs Management) என்னும் விடயத்தைப் பற்றிய விரிவுரையை சிரேஷ்ட மருந்தாளர் (Pharmacist) திருமதி MH முனாபிராறா வழங்கினார்.

மிகவும் சுறுசுறுப்பாகவும், சுவாரசியமாகவும் அமைந்த இன்றைய அமர்வில் அனைத்து பயிலுனர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள்.

இரண்டாம் நாள் நிகழ்வு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக கலந்துகொண்ட பயிலுனர்கள் அனைவரும் தெரிவித்தனர்.

இந்தப் பயிற்சிநெறியின் மூன்றாம் நாள் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :