பிரபல ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் ஸ்ரீலங்கன் டொப் 100 விருது வென்றார் !



கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினரும், பிரபல ஊடகவியலாளருமான நூருல் ஹுதா உமர் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற அகாசா நிறுவன ஸ்ரீலங்கன் டொப் 100 விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

15 வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றிவரும் இவர் ஆய்வு கட்டுரைகளை வரைவதிலும், சமூக பிரச்சினைகளை துணிச்சலுடன் ஊடகங்களுக்கு அறிக்கையிடுவதிலும் முன்னிலை வகிக்கும் ஒருவராவார். அரசியல், சமூக, சமய, பொருளாதார பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் இவர் ஊடகத்துறைக்காக இந்த ஸ்ரீலங்கன் டொப் 100 விருதை தனதாக்கியுள்ளார்.

எமது செய்தி நிறுவனத்திலும் பிராந்திய செய்தியாளராக செய்திகளை அனுப்பிவரும் இவர், தொடர் கட்டுரை வரைவதிலும் ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகிறார். எழுத்தாளராக, பேச்சாளராக, கவிஞராக, அறிவிப்பாளராக பல்வேறு திறமைகளை கொண்ட இவர் கிழக்கின் செயற்பாட்டு நிலை முக்கிய ஊடகவியலாளர்களில் ஒருவராவார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பல்வேறு துறை சார்ந்த சாதனையாளர்களை கௌரவிக்கும் விதமாக இடம்பெற்ற அகாசா நிறுவன ஸ்ரீலங்கன் டொப் 100 விருது வழங்கி கௌரவிக்கும் இந்நிகழ்வில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, இலக்கிய புரவலர் காஸிம் உமர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணிப்பாளர் ஹட்சன் சமரசிங்க, மதகுருமார்கள், ஊடக நிறுவன பிரதானிகள், பத்திரிகை ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :