கல்முனை கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் 12 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான மூன்று போட்டி நிகழ்வுகளில் முதலிடம் பெற்று சம்பியானான கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி எஸ். எப். அஸ்ரிபா கெளரவிப்பு.



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை கோட்ட மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள் கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளரும், கல்முனை கோட்டக்கல்விப் பணிப்பாளருமான ஏ.பி. பாத்திமா நஸ்மியா சனூஸ் தலைமையில் மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.

இக் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) சார்பாக கலந்து கொண்ட தரம் 06 இல் கல்வி பயிலும் எஸ்.எப். அஸ்ரிபா 12வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் 4X50 மீற்றர் அஞ்சலோட்டத்தில் இரண்டாம் 08ம் இடத்தையும், 100 மீற்றர், 60 மீற்றர் ஓட்டம் மற்றும் நீளம் பாய்தல் ஆகிய மூன்று தனி நிகழ்ச்சிகளிலும் முதலிடங்களைப் பெற்று சாம்பியனானார்.

கல்முனை கோட்டமட்ட விளையாட்டுப் போட்டியில் சம்பியானான மாணவி எஸ்.எப். அஸ்ரிபாவை கெளரவப்படுத்தும் நோக்கில் மஹ்மூத் கல்லூரி கல்வி சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு வைபவம் கல்லூரி அதிபர் யூ.எல்.எம். அமீன் தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலய கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபிர் கலந்து கொண்டார்.

குறித்த நிகழ்வில் கோட்ட கல்வி அலுவலகத்தினால் வழங்கப்பட்ட சம்பியன் வெற்றி கிண்ணம் மற்றும் சான்றிதழ்களை
பிரதம அதிதி இம் மாணவிக்கு வழங்கி வைத்தார்.

கல்முனை கோட்டமட்ட விளையாட்டுப் போட்டியில் சம்பியன் பெற்ற மாணவியை திறம்படவழிப்படுத்திய இணைப்பாடவிதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் ஏ.எச். நதீரா, உடற்கல்வி பாட இணைப்பாளர் எம்.ஜ. ரஃபீக்கா பீவி (தரம் - 07 பகுதித் தலைவி), எம்.ஜ. சாமிலா (தரம் - 08 பகுதித் தலைவி), உடற்கல்வி ஆசிரியர்களான எம்.ஆர்.எம். றப்கான், எம்.எம். றிசான், ஆர்.எம். அஸ்மி, மற்றும் சாதனை படைத்த மாணவிக்கும் பாடசாலை சமூகம் சார்பாக அதிபர் யூ.எல்.எம். அமீன் பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார் .

இந்நிகழ்வில் பிரதி அதிபர் (நிருவாகம்) ஹாஜியானி. சமதா மசூது லெவ்வை, உதவி அதிபர்களான ஏ.எச். நதீரா, எம்.எஸ். மனுனா, என்.டி. நதீகா, பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசாரா உழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :