13ஐ அமுல்படுத்த இலங்கை வந்த இந்தியப்படையை ஆக்கிரமிப்பு படையாக கருதி சண்டையிட்டனர். இலங்கை விடயத்தில் கையை வைத்தது மடத்தனம் என்பதை இந்தியா பட்டறிவு கண்டது.
30 வருட யுத்தம் நடத்தியும் ஒரு சத நிலம் கூட கிடைக்காமல் புலிகள் அழிந்தனர். இதனால் சிங்கள பேரினவாத்துக்கே இறுமாப்பு வந்து முஸ்லிம்களையும் தாக்கியது
புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் கூட்டமைப்பும் சமஷ்டி வேண்டும், இல்லாவிட்டால் பாரு ஒங்கப்பன் மவனே என கூறி அரசுகளுடன் சண்டைக்கு நிற்பது போல் தமிழ் மக்களை ஏமாற்றியது.
இடையில் 13 + என மஹிந்த ராஜபக்ஷ சும்மா தமாசுக்கு சொன்னதை நம்பி கூட்டமைப்பு கனவு கண்டது.
வடக்கு கிழக்கு இணைப்பு, காணி பொலிஸ் அதிகாரத்தை முஸ்லிம்கள் விரும்பவில்லை என தெரிந்தும் எட்டப்பன் ஹக்கீமை வைத்துக்கொண்டு இந்தியாவுக்கு படம் காட்டினர்.
இதையெல்லாம் சரியாக கவனித்து இந்தியா சென்று வந்த ஜனாதிபதி ரணில் அனைத்து கட்சிகளும் ஆதரித்தால்த்தான் அதிகார பகிர்வு என ஒரு போடு போட்டார். அதை அவர் இந்தியாவுடன் ஆலோசிக்காமலா சொல்லியிருப்பார் என்று கூட தமிழ் கூட்டமைப்பு சிந்திக்கவில்லை.
இப்போது பிச்சை வேணாம் நாயைப்பிடி என்பது போல் 87ம் ஆண்டைய ஜே ஆரின் 13ஐ கேட்கிறார்கள்.
கிடைப்பதை எடுத்து விட்டுக்கொடுப்புடன் தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையாய் வாழ வேண்டும் என்ற சிந்தனை இருந்திருந்தால் இத்தனை அழிவு வந்திருக்குமா?
கணவனால் தாக்கப்பட்ட மனைவி அவனுக்கு அடிக்க முடியாமல் குழந்தையை அடிப்பது போல் வடக்கு கிழக்கின் இனவாத தமிழர்கள் முஸ்லிம்கள் மீது இனவாதம் கக்கினர். நிலங்களை ஆக்கிரமித்தனர்.
ஒரு சிறிய பிரதேசமான கல்முனையில் முஸ்லிம்களுடன் ஒன்றாய் வாழத்தெரியாமல் மல்லுக்கட்டும் தமிழ் கூட்டமைப்பு இனியாவது பாடம் படித்திருக்குமா என்றால் சந்தேகம்தான்.
ஏனென்றால் ஏமாற்றி பழகியவன் ஏமாற்றிக்கொண்டே இருப்பான்.
0 comments :
Post a Comment