இந்நிகழ்வுக்கு கௌரவ அத்திகளாக நிதியத்துக்கு பெரியளவில் நிதியுதவி வழங்கிய பரோபகாரிகளான சொப்டா நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாயும் கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் தவிசாளருமான பொறியியலாளர் எம்.எம். நஸீர், முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினரும் றியோ மார்க்கட்டிங் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளருமான என்.எம்.றிஸ்மிர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிதியத்தின் செயலாளர் முன்னாள் வங்கி அதிகாரி யூ.எல்.எம்.ஹனிபா நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். ‘இஸ்லாத்தில் ஸகாத்’ எனும் தொனிப்பொருளில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் மௌலவி எம்.எம்.எம்.சலீம் (ஷர்க்கி) அவர்கள் பிரதான உரையாற்றினார்.
2023 ஆம் ஆண்டில் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஸகாத் நிதியத்துக்கு பணமாக 10560000.00 ரூபாயும் 575000.00 பொறுமதியான நெல் மூட்டைகளாகளும் கிடைத்திருந்தன. குறித்த பணம் உள்ளிட்ட நெல் மூட்டைகளும் அவரவரது தேவைக்கு ஏற்ப பங்கீடு செய்யப்பட்டன.
நிகழ்வில் நிதியத்தின் பொருளாளர் யூ.எல்.எம்.ஹனிபா, பிரதித் தலைவர் ஐ.எல்.எம்.றவ்பி (ஹிலிறி), சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசல் பொறுப்பாளர் சபையின் செயலாளர் ஐ.எல்.எம். மன்சூர் மற்றும் மரைக்காயர் சபை உறுப்பினர்கள், உதவி பெறுவோர் என பலரும் பங்கு கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment