மட்டக்களப்பு - செங்கலடி மத்திய கல்லூரியின் 149வது வருட பாடசாலை தினத்தையொட்டி பழைய மாணவர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி இன்று பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் தே.குகதாசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் - கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் அவர்கள் கலந்து கொன்டிருந்ததுடன் , மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான அவர்களும் , ஏறாவூர் பொலிஸார் பொறுப்பதிகாரி , செங்கலடி பிரதேச சபை செயலாளர் மற்றும் பாடசாலையின் முன்னாள் அதிபர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
பாடசாலையின் பழைய மாணவர்களின் 22 அணிகள் கலந்து கொண்ட சுற்றுப்போட்டியின் இறுதிச்சுற்றுப்போட்டி இன்று பாடசாலை மைதானத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
கடந்த 8 ம் திகதி ஆரம்பமான 22 அணிகள் பங்கு கொண்ட போட்டிகள் வார இறுதிநாள்களில் இடம்பெற்றவந்தது.
5 ஓவர் கொண்ட இறுதிப்போட்டிக்கு - 2014 ம் ஆண்டு உயர்தர பழைய மாணவர் அணியும் , 2019 ம் ஆண்டு உயர்தர பழைய மாணவர் அணியும் தெரிவாகி பலப்பரிட்சையில் ஈடுபட்டனர்.
முதலில் துடுப்பெடுத்தாடிய 2019 உயர்தர அணி 5 ஓவர் முடிவில் 60 ஓட்டங்களைப் பெற்றனர். இதில் பிரவீன் , தனுசிகன் ஜோடி 25 பந்துகளுக்கு முகங்கொடுத்து 48 ஓட்டங்களைப்பெற்றனர்.
61 என்ற ஓட்டத்தை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய 2014ம் ஆண்டு உயர்தர அணி - போட்டியின் 5 ஓவர் முடிவில் 61 ஓட்டங்களைப்பெற்று 7 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டினர் - இதில் துடுப்பெடுத்தாடிய பரணி, முகுந்தன் ஜேடி 57 ஓட்டங்களைப்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
போட்டியில் தொடர் ஆட்டநாயகன் விருதை ஐங்கரன் அவர்களும் , ஆட்ட நாயகனுக்கான விருதை பரணி அவர்களும் பெற்றிருந்தனர்.
இதே வேளை போட்டியில் வெற்றியீட்டிய 1ம் 2ம் 3ம் அணிகளுக்கான வெற்றிக்கோப்பையினை அதிதிகள் வழங்கி வைத்தார்.
மேலும் மைதானத்தில் பெண்கள் பழைய மாணவர்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியும் இடம்பெற்றது
குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment