ஏறாவூர் பிரதேசத்தில் 1990 ஆகஸ்ட் 12இல் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான படுகொலையின் 33ஆவது ஆண்டு நினைவு அனுஷ்டிக்கப்பட்டது.
ஷுஹதாக்கள் ஞாபகார்த்த பேரவையின் ஏற்பாட்டில் அதன் தலைவர் லத்தீப் ஹாஜியார் தலைமையில் நேற்று ஏறாவூர் பள்ளிவாயல்கள் சம்மேளனம், உலமா சபை , வர்த்தக சங்கம், ஆட்டோ சங்கம் ,உட்பட ஊரின் முன்னனி அமைப்புக்கள், சமூக நிறுவனங்கள் , சமூக செயற்பாட்டாளர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது,
சுஹதாக்கள் தின நிகழ்வு மஸ்ஜிதுல் நூருஸ்ஸலாம் பள்ளிவாசலில் சுபஹ் தொழுகையை தொடர்ந்து கத்தமுல் குர்ஆன் மற்றும் துஆ பிரார்த்தனை , நினைவு பேருரை , ஏறாவூரில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி துயரத்தை வெளிப்படுத்தும் வகையில் வெள்ளை கொடிகளை பறக்க விட்டு இதற்கான முழுமையான முன்னெடுப்புக்களையும் , வர்த்தக சங்கத்தின் ஒழுங்கமைப்புடன் மேற்கொள்ளப்பட்டது.
அமைதியான முறையிலான கவனஈர்ப்பு பேரணி ஏறாவூர் ஷுஹதாக்கள் பூங்கா முன்றலிலில் இருந்து ஆரம்பித்து காட்டுப்பள்ளி வீதி வழியாக பிரதான வீதிக்கு சென்று நகர சபை முன்றலில் வைத்து குறித்த புலிகளின் அக்கிரமத்திற்கான நீதி கோரிய மகஜர் கடிதத்தினை பிரதேச செயலாளரிடம் நிகரா மவூஜித் கரங்களில் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதியிடம் சேர்ப்பிப்பதற்காக பிரதேச செயலாளரிடம் சுகதாக்கள் நினைவுப்பேரவையினால் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
வர்த்தக சங்க ஏற்பாட்டில் நார்சா வர்த்தக சங்க தலைவர் ஜெலில் ஹாஜியார் தலைமையில் வழங்கப்பட்டது ஊர் பிரமுகர்கள் உலமாக்கள் பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment