24 மணிநேரம் நடனமாடி சோழன் உலக சாதனை புத்தகத்தில் மலையக பெருந்தோட்ட சமூகத்தை சார்ந்த 7 இளைஞர்களும், இரு யுவதிகளும் இடம்பிடிப்பு



க.கிஷாந்தன்-
லங்கை தொழிலாளர் காங்கிரஸ் இளைஞர் அணியின் அனுசரனையில் இடைவிடாது தொடர்ச்சியாக 24 மணிநேரம் நடனமாடி சோழன் உலக சாதனை புத்தகத்தில் மலையக பெருந்தோட்ட சமூகத்தை சார்ந்த 7 இளைஞர்களும், இரு யுவதிகள் இடம்பிடித்துள்ளனர்.

லிந்துலை,மெரேயா,அக்கரபத்தனை, டயகம ஹப்புத்தளை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குறித்த இளைஞர், யுவதிகள் 16 முதல் 26 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், இவர்கள் ஹட்டன் பகுதியில் உள்ள நடன பயிற்சி நிலையமொன்றில் பயிற்சி பெற்றவர்கள் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீநாகவானி ராஜாவின் மேற்பார்வையில் ஆகஸ்ட் 30 ஆம் திகதி காலை 8 மணி முதல் ஆகஸ்ட் 31 ஆம் திகதி காலை 8 மணிவரை குறித்த இளைஞர்கள் தொடர்ச்சியாக நடனமாடியுள்ளனர். ஹட்டன், டன்பார் மைதானத்தில் இந்த சாதனை நிகழ்வு இடம்பெற்றது.

நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர், யுவதிகள் கட்டங்கட்டமாக ஓய்வெடுக்கவும், உணவு உண்ணவும் சிறிது நேரம் அனுமதி வழங்குவதற்கு சோழன் மேற்பார்வைக் குழுவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். குறித்த இளைஞர், யுவதிகளின் சாதனை ஆட்டத்தை கண்டுகளிக்க பெருமளவானோர் வருகை தந்திருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :