முன்மாதிரியான அரச ஊழியர்கள் 5 பேர் தெரிபு செய்யப்பட்டு ட்ரான்ஸ்பேரன்ஸினால் கொழும்பில் கௌரவிப்பு



அஷ்ரப் ஏ சமத்-
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலகங்கா நிறுவனமானது (Transparency International Sri Lanka (TISL) 2022-23 ஆண்டுக்கான இன்டக்ரிட்டி ஜக்கன் (Integrity Icons Sri Lanka )(நேர்மைக்கு மகுடம்) விருது வழங்கும் இறுதி விழா ஆகஸ்ட் 17ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

நேர்மையுடன் அர்ப்பணிப்புடன் சிறந்த விழுமியங்களை கடைப்பிடித்து பொது மக்களுக்கு சேவையாற்றும் அரச ஊழியர்களை அங்கீகரித்து கௌரவிக்கும் ஓர் தளமாக இந் நிகழ்வு திகழ்கிறது. தான் ஓர் அரச அதிகாரி தனக்கு அரச அலுவலக வாகமொன்று வழங்கப்பட்டிருந்தாலும்.. தனது சொந்த சேவைக்கு. அல்லது தனது மகனை மகளை ஒருபோதும் அரச வாகனத்தில் ஏற்றி பாடசாலைக்கு அனுப்பாதவர்கள். அவர்களது பிள்ளைகளை சாதாரண போக்குவரத்து பஸ்ஸிலேயே பாடசாலை போவதற்கு அனுமதித்தவர்கள்.......

அரச சேவை என எவர் வந்தாலும் அவருக்குரிய சேவையை வழங்குபவர்கள், மக்களை அலைச்சல் படுத்தாமல், தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள அரச ஊழியர்களையும் அன்பாக தான் பெறும் மாதச் சம்பளம் பொது மக்களது வரியில் பெறப்படுகின்றது. தான் பெறும் ஊதியத்திற்கு நான் நாட்டுக்கும் பொதுமக்களுக்கும் என உன்னதமான சேவைகளை செய்பவர்கள்.
அரச சொத்தை, நிதியை துஸ்பிரயோகம்,செய்யாதவர்கள் தான செய்த சேவைக்கு கைக்கூழியாக ஒருபோதும் அன்பளிப்பு பெறாதவர்கள்........என பல்வேறு கோணத்தில் இவர்களை நடுவர்கள் குழு அவதானித்து இவ் விருதைப் வழங்கியுள்ளார்கள்..... மேற்படி அதிகாரிகளுடன் மேலும் 5 அதிகாரிகள் ஆறுதல் பரிசுகளையும் பெற்றுக் கொண்டனர்.

தனக்கு அரச வாகனமில்லாத காலத்திலும் கூட இயற்கை அனர்தம், கொவிட் 19 காலத்திலும் தமது சொந்த வாகனம் அல்லது பொதுப் போக்குவரத்தில் மக்களது காலடியிக்குச் சென்று அவர்களது பிரச்சினைகளை உடனுக்கு உடன் தீரத்து வைப்பவர்கள், .....

பொதுமக்களுக்காக சேவை வழங்கு வதை முதன்மையாக கொண்டு நேர்மையாகவும், தமது கடமை நேரத்திற்கு அப்பால் தம்மை அர்ப்பணித்து பணியாற்றும் நேர்மையான அரச அதிகாரிகளை கண்டறியும் இன்டக்ரிட்டி ஜக்கன் (நேர்மைக்கு மகுடம்) செயற்திட்டத்தினை எக்கவுண்டபிலிட்டி லெப் நிறுவனத்துடன் இணைந்து ஜந்தாவது முறையாக ட்ரான்ஸ்பேரன்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது..இத்திட்டம் முதன் முதலாக நேபாளத்தில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் இலங்கை உட்பட 12 நாடுகளில் இவ் சர்வதேச அமைப்பு இவ்விருதினை வழங்கும் செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

ஜந்து பேர் அடங்கிய அனுபவம் வாய்ந்த நடுவர் குழுவினால் விண்ணப்ப மதிப்பாய்வு மற்றும் நேர்காணல்கள் இவா்களது சேவைகளைப் பெற்ற பொதுமகக்ள், சக ஊழியர்கள் மேலதிகாரிகள் என சுமார் எழு மாத கால மிக நுணுக்கமான மதிப்பீட்டை தொடா்ந்து இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. திரு ஒஸ்டின் பெர்னான்டோ, ஓய்வு பெற்ற சிரேஸ்ட அரச அதிகாரி எஸ் .தில்லைநடராஜா, ஓய்வு பெற்ற சிரேஸ்ட அரச அதிகாரி வைத்தியர் வின்யா ஆரியரத்தின, பொதுச் செயலாளர் சர்வோதய சிரமானத சங்கம் சிரீன் சருர் சமாதானம் மற்றும் பெண்கள் உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளர் மற்றும் ரமனி ஜயசுந்தர நீதி மற்றும் பால்நிலை செயற்திட்டப் பணிப்பாளர் ஆகியோர் நடுவர் குழு உறுப்பிணர்களாவார்

இந் நிகழ்வின்போது சிறந்த ஜந்து அரச அதிகாரிகளுக்கு இன்டக்ரிட்டி ஜக்கன் வழங்கப்பட்டவர்கள் பின்வருமாறு
இவர்களுக்கான விருதுகளை இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாகவும் நிதி ஆனைக்குழுவின் தலைவராக தற்போது கடமையாற்றும் சிரேஷ்ட அரச அதிகாரி சுமித் அபேசிங்க அவர்கள் கலந்து கொண்டு விருதினை வழங்கி வைத்தார்

(1) சுபாஜினி மதியழகன் பிரதேச செயலாளர் பிரதேச செயலகம் வலிகாமம் கிழக்கு ,கோப்பாய் (கடந்த 19 வருட காலமாக யுத்த காலத்தில் மெனிக் பாமிலிருந்து இன்று வரை அரச அதிகாரியாக கடமையாற்றுபவர்)

(2) யசோதா உதயகுமார் பிரசே செயலாளர் பிரதேச செயலகம் வலிகாமம் தென்மேற்கு சண்டிலிப்பாய் (ஆசிரியராக, உதவி விரிவுரையாளராக கடந்த 20 வருடகாலமாக அரச அதிகாரியாக கடமையாற்றுபவர்)

(3) விஜயவர்தன அபேயவிக்கிரம நிசங்க வைத்தியர் மாவட்ட ஆதார வைத்தியசாலை. ரிகில்லகஸ்கட மற்றும் சுகாதார சேவைகள் அலுவலகம் மாவட்ட பணிப்பாளர் நுவரெலியா
(4) பிரதிபானி ஸ்ரீ விஜயந்தி மொல்லிமெகாட தாதி ஆதார வைத்தியசாலை எல்பிட்டிய
(5) நளின் பிரசன்ன விஜேசேகர மேலதிக சுகாதார வைத்தியர் பொதுச் சுகாதார பணிமனை அம்பலாங்கொடை







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :