கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை) 75வது ஆண்டு நிறைவின் பவள விழாவை முன்னிட்டு இப்பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் அணுசரனையில் பாடசாலையின் சுவர்களில் கடந்த இரண்டு மாதங்களாக வரைப்பட்ட ஓவியங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.பைசால் அவர்களின் வழிகாட்டலில் இவ் ஓவியங்களை வரைவதற்கு பொறுப்பான ஒருங்கிணைப்பாளர்களான எஸ்.ஸ்ட்.எம். சுனூஸ்,பி.எம். றுக்ஸான் மற்றும் ஏ.தாரிக் ஆகியோரின் ஏற்பாட்டில் இன்று பாடசாலை அதிபரினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிழ்வில் பாடசாலை அதிபர் எம். எஸ்.எம்.பைசால், பிரதி அதிபர் எம்.ஏ.ஸலாம், ஒழுக்காற்றுக் குழுத் தலைவர் ஆசிரியர் எம்.பி.எம்.லாபிர், விளையாட்டுப்பிரிவுப் பொருப்பாளர் ஆசிரியர் யூ.எல்.எம்.றியால் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் எஸ்.எல்.ஏ.ஹமீட், பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.ஐ.எம்.ஜிப்ரி, அக்ஸான் இன்ஜினியரிங் வேக்ஸின் பணிப்பாளர் கே.எல்.எம்.அர்ஸாத், பழைய மாணவர்கள் சார்பாக எஸ்.என் ஹஸ்மி, எஸ்.எல்.தன்சில், யூ.கே.லாபிர், எஸ்.எம்.ஹர்னி உட்பட நலன்விரும்பிகளும் பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment