ஏறாவூர் நகர சபையின் திண்மக் கழிவு முகாமைத்துவப் பிரிவு மற்றும் வேலைப் பிரிவுகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் 78 ஊழியர்கள் இன்று விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
சிற்றூழியர் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு இன்று ஏறாவூர் வாவிக் கரைப் பூங்காவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
ஏறாவூர் நகரசபை செயலாளர் எம்எச்எம்_ஹமீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத், உதவி பிரதேச செயலாளர் எம்.ஆர்.சியாஹுல் ஹக், கணக்காளர் ஆர்.எப்.புஷ்ரா மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எச்.எம்.பழீல், ஏறாவூர் வர்த்தக சங்க தலைவர் அல்ஹாஜ் ஜலீல், திடீர் மரண விசாரணை அதிகாரி அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.நசீர் உட்படநகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment