கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவையின் ஏற்பாட்டில் 'பேராசிரியர் மர்ஹும் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் - வாழ்வும் பணியும்' நூல் வெளியீட்டு விழா திங்கட்கிழமை (31) தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தின் கேட்போர் கூடத்தில் கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவையின் தலைவரும்,தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கை அறபு மொழி பீடத்தின் முன்னாள் பீடாதிபதியுமான பேராசிரியர் எம்.எஸ்.எம்.ஜலால்தீன் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பிரதம அதிதியாக யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம் பிள்ளை, சிறப்பு அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் பேராசிரியர் எம்.பி.எம்.இஸ்மாயில் வெளியீட்டுரையை நிகழ்த்தினார். நூல் அறிமுக உரையை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை,கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் நிகழ்த்தினார்.
விரிவுரையாளர் எம்.அப்துல் றஸாக் கவிதை பெழிந்ததுடன் பிரதம அதிதி மற்றும் சிறப்பதிதி ஆகியோரின் உரைகளும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக பீடாதிபதிகள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், நூலகர், ஊவா வெல்லச பல்கலைக்கழக பதிவாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர்கள், பேரவை உறுப்பினர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரீ. ஹசன் அலி, இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment