ஆளுநரிடம் கோவிலூர் விஜிதாவின் புதுவரவு நூல் கையளிப்பு.



வி.ரி.சகாதேவராஜா-
திருக்கோவில் பிரதேச விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவரும் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் கடமை புரியும் பொலிஸ் சார்ஜன்ட்டுமான கிருஸ்ணபிள்ளை விஜிதாவின் "புதுவரவு " எனும் சிறுவர் பாடல் நூல் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் வழங்கி வைக்கப்பட்டது.

திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் ஆலயபரிபாலன சபையின் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் தலைமையில் இந் நூல் ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் வழங்கி வைக்கப்பட்டது.

அங்கு கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் பொதுச்செயலாளர் கலாநிதி எம். கோபாலரெத்தினம் ,கிழக்கு மாகாண கலாச்சார பணிப்பாளர் ச. நவநீதன், திருக்கோவில் பிரதேச செயலாளர் த. கஜேந்திரன், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஜே.அதிசயராஜ், தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் எஸ். குணபாலன், திருக்கோவில் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் ஐ.கமல்ராஜ் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
திருநாவுக்கரசு ஆதீனத்தின் பணிப்பாளர் கண. இராஜரெத்தினத்தின் வேண்டுகோளை ஏற்று உதவி கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா நெறிப்படுத்தி தொகுத்தளிக்கையில் இந்த ஏற்பாட்டை செய்திருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :