சம்மாந்துறை பாடசாலை மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட பின்தங்கிய பிரதேசமான நெய்னாகாடு அல் அக்ஸா வித்தியாலய மாணவிகள் இருவர் இம்முறை (2023) கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறை, நெய்னாகாடு அல் அக்ஸா வித்தியாலய மாணவி பாத்திமா றினா என்ற மாணவி 12 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 60 மீற்றர் மற்றும் 100 மீற்றர் ஓட்ட போட்டிகளில் இரண்டாம் இடத
யும்,

மாணவி யூ.எல்.எப். சீபா 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்ட போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்று கிழக்கு மாகாண மட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்ததுள்ளனர்.

தெரிவு செய்யப்பட்ட இரு மாணவிகளுக்கும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம் மாஹிர் தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன் அவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி வைத்தார் .

இந் நிகழ்வில் பாடசாலை அதிபர் ஏ.பி.ஹிபதுல்லா அவர்களும் கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :