அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட லீக் அனுசரணையில் கல்முனை சனிமவுன்ட் விளையாட்டுக்கழகம் நடத்தும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த உதைபந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான மர்ஹூம் எம்.ஐ.எம்.இக்பால் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண மின்னொளி உதைபந்தாட்ட முதலாவது அரையிறுதிப் போட்டியில் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக்கழகத்தை வெற்றி கொண்டு கல்முனை சனிமவுன்ட் விளையாட்டுக்கழகம் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இச்சுற்றுப் போட்டியில் வியாளக்கிழமை (24) இரவு மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக்கழகத்திற்கு எதிரான போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோலை புகுத்திய நிலையில் மத்தியஸ்தர் ரீ.காந்தன் தண்டனை உதை வழங்கப்பட்டது.
தண்டனை உதை மூலம் 4:2 கோல் அடிப்படையில் கல்முனை சனி மவுன்ட் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.
0 comments :
Post a Comment