கைபேசி பாவிக்கும் குழந்தை மனநலம் குன்றி பெற்றோரை எதிரிகளாக கருதும் அவலம் உருவாகும்.!



கொடையாளர் கௌரவிப்பு விழாவில் கல்விப்பணிப்பாளர் உமர் மௌலானா உரை.

வி.ரி.சகாதேவராஜா-
கைப்பேசி பாவிக்கும் குழந்தைகள் மனநலம் குன்றி, பெற்றோரை எதிரிகளாக கருதும் அவலநிலை உருவாகும். எனவே குழந்தைகளுக்கு கைப்பேசியை வழங்காதீர்கள் என்று அன்னமலை ஸ்ரீ சக்தி வித்தியாலய
கொடையாளர் கௌரவிப்பு விழாவில் உரையாற்றிய சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா தெரிவித்தார்.

மேற்படி கொடையாளிகள் கௌரவிப்பு விழா பாடசாலை அதிபர் பொன் பாரதிதாசன் தலைமையில் நேற்று(26) சிறப்பாக நடைபெற்றது.

கௌரவ அதிதியாக சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா மற்றும் ஆசிரிய ஆலோசகர் பி.வி.குணரத்ன ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள் .
அங்கு அன்னமலை கொடையாளிகளால் செய்யப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன.

கொடையாளி சித்திர சேனன் விஜிகரனின்( ஜேர்மனி) ஏற்பாட்டில் வரையப்பட்ட பாடசாலை மதில் சுவர்ஓவியங்கள் திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன் கொடையாளி அருள்ராஜா ஜெகதீசனின்( அவுஸ்திரேலியா) ஏற்பாட்டில் நிறுவப்பட்ட கொடிக்கம்பதளம் மற்றும் காலை ஆராதனை மேடை என்பன திறந்து வைக்கப்பட்டது.

மேலும் கொடையாளி கே.எம்.நிறோஜன்( கொழும்பு) பெற்றார் ஆசிரியர் ஒன்று கூடல் மண்டபத்திற்கான அடிக்கல் நடப்பட்டது.

அங்கு வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா மேலும் பேசுகையில்..

கைப்பேசிகளால் எமது நிம்மதி குறைகிறது. குறிப்பாக
குழந்தைகள் மத்தியில் தொலைபேசி மற்றும் இணையம் ஆகியவற்றின் அதிக பயன்பாடு காரணமாக குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது. குழந்தைகள் வெகுவாக இணையக் காணொளியில் விளையாட்டுகளுக்கு அடிமையாகின்றனர்.
இணையக் காணொளி விளையாட்டு போட்டிகளில் குழந்தைகள் தீவிரமாக அவதானம் செலுத்துதால் மனநல நோய்க்கு உள்ளாகின்றனர். இதனால் பிள்ளைகள் கல்வியில் தோல்வியடைந்து பெற்றோரை எதிரிகளாக நோக்குகின்றனர். இதனால் குழந்தைகளின் எதிர்காலம் முற்றாக அழிந்துவிடும். எனவே குழந்தைகளுக்கு இயன்றவரை கையடக்க தொலைபேசியை வழங்குவதை பெற்றோர் தவிர்த்துக்கொள்ள வேண்டும் . என்றார்

சிறப்பதிதி வி.ரி.சகாதேவராஜா பேசுகையில் .

அன்னமலை ஸ்ரீ சக்தி வித்யாலயம் சமூகத்தை உள்வாங்கி இருக்கின்றது .அதனால் இத்துணை அபிவிருத்தி காண்கிறது. அதிபர் பாரதி பாராட்டுக்குரியவர். வாழ்த்துக்கள். என்றார்.

கொடையாளிகள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன. மேலும் பல கலைநிகழ்ச்சிகள் மேடையேறின.









.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :